உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி; இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இலங்கை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது. லக்னோவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 43.3 ஓவரில் 209 ரன்களில் சுருண்டது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 35.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஜோஷ் இங்லிஸ் 58, மிட்செல் மார்ஷ் 52, மார்னஸ் லபுசேன் 40 ரன்கள் எடுத்தனர்.