புதுடெல்லி: இரு முறை உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருந்த சுழல்பந்து வீச்சாளர் பியுஷ் சாவ்லா (36), அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் பியுஷ் சாவ்லா நேற்று வெளியிட்ட பதிவில் இத்தகவலை அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2006ம் ஆண்டு இந்திய அணியில் இடம்பெற்ற சாவ்லா, 2007ல் டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியிலும், 2011ல் ஒரு நாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் இடம்பெற்றவர். அவர், 3 டெஸ்ட், 25 ஒரு நாள், 7 டி20 போட்டிகளில் ஆடி 43 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். தவிர, சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் (தற்போது பஞ்சாப் கிங்ஸ்), மும்பை இந்தியன்ஸ் ஆகிய ஐபிஎல் அணிகளுக்காக 2008 முதல் 2024 வரை சாவ்லா ஆடியுள்ளார்.
கிரிக்கெட்டில் இருந்து பியுஷ் சாவ்லா ஓய்வு
0