டெல்லி: ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராகிறார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா தற்போது பிசிசிஐ செயலாளராக உள்ளார். ஐசிசி தலைவராக உள்ள கிரேக் பார்க்லே பதவி விலக உள்ளதை அடுத்து ஜெய் ஷா தலைவராகிறார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராகும் 3வது இந்தியர் ஜெய் ஷா. ஏற்கனவே ஜக்மோகன் டால்மியா, சரத்பவார் ஆகியோர் ஐசிசி தலைவராக பதவி வகித்தனர்.