மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சொக்கலிங்கம் பிள்ளை வீதியை சேர்ந்தவர் தாமோதர கண்ணன் (45). டிரைவிங் ஸ்கூலில் மேனேஜர். மனைவி கங்காதேவி (38), மகன் சஷ்வந்த் (7) தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் விடுமுறை என்பதால், மூவரும் வீட்டில் இருந்தனர். வீட்டின் முன்புறம் கங்காதேவியின் சகோதரி குழந்தைக்காக கட்டப்பட்டிருந்த தொட்டிலில் விளையாடி கொண்டிருந்தபோது, தொட்டிலின் கயிறு சஷ்வந்த் ழுத்தை இறுக்கி பரிதாபமாக இறந்தான்.