அறந்தாங்கி: அறந்தாங்கி பஸ் ஸ்டாண்டில் கடைகளின் கட்டிடம் சேதமடைந்துள்ளதால் கீழே விழும் நிலையில் உள்ளது. கடைகளுக்கு உள்ளே மழை ஒழுகுவதால் வியாபாரிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை நகராட்சி நிர்வாகம் சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரிய நகராட்சியாக அறந்தாங்கி நகராட்சி உள்ளது. இந்நிலையில் அறந்தாங்கி பஸ் ஸ்டாண்டிற்கு அறந்தாங்கி அரசு பணிமனையில் இருந்து நாள்தோறும் நூற்றுகணக்கான பேருந்துகள் பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது. இதனால் அறந்தாங்கி பஸ் ஸ்டாண்டிற்க்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பஸ் ஸ்டாண்டிற்க்கு வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்டை சுற்றி நகராட்சி நிர்வாகத்தின் கீழ் கடைகள் கட்டப்பட்டு கடைகளில் வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர்.
பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகள் கட்டி பல ஆண்டுகளை கடந்த விட்டது. இதனால் கட்டிடங்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் மழை நேரத்தில் மழை தண்ணீர் கடைகளுக்கு உள்ளே வருகிறது. மேலும் பஸ் ஸ்டாண்டில் இருந்து பின்பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள சுவற்றில் அரசமரம் வளர்ந்து சுவர் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கீழே விழும் என்ற நிலையில் உள்ளது. தற்போது அறந்தாங்கி பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் கட்டங்களில் உள்ள விரிசல்களில் மழை தண்ணீர் தேங்கி கட்டடம் அடைந்து விழ வாய்ப்பு உள்ளதால் அறந்தாங்கி பஸ் ஸ்டாண்டில் கட்டடத்தில் உள்ள விரிசல்களையும் உடைந்துள்ள இடங்களை சரிசெய்து அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.