விருதுநகர்: பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பு தொடர்பாக விருதுநகரில் மாவட்ட அட்சியர் ஜெயசீலன் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் பங்கேற்றுள்ளார். பட்டாசு விபத்தை தடுப்பது குறித்து பட்டாசு ஆலை, கடை உரிமையாளர்கள் ஆலோசனை வழங்கிவருகின்றனர்.