புதுடெல்லி: ‘ மாடு கடத்தியதாக தவறாக நினைத்து 12ம் வகுப்பு மாணவனை பசு பாதுகாவலர்கள் கொலை செய்த விவகாரம் குறித்து துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் வாய் திறப்பார்களா?’ என கபில் சிபல் கேள்வி எழுப்பி உள்ளார்.
மாநிலங்களவை எம்பியான கபில் சிபல் தனது எக்ஸ் பதிவில், ‘‘நமக்கு இது அவமானம். அரியன் 12ம் வகுப்பு மாணவன். அரியானாவில் அவன் மாடு கடத்தியதாக தவறுதலாக நினைத்து பசு பாதுகாவலர்களால் கொல்லப்பட்டுள்ளார். இதற்கு காரணம், வெறுப்பை ஊக்குவித்ததுதான். இதைப் பற்றி பிரதமர், நமது துணை ஜனாதிபதி, ஒன்றிய உள்துறை அமைச்சர் ஆகியோர் பேசுவார்களா?’’ என கேள்வி எழுப்பி உள்ளார்.