துரைப்பாக்கம்: பெரும்பாக்கம், சவுமியா நகரை சேர்ந்த 75 வயதுடைய இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரி, சாலையில் நடந்து சென்றபோது, அங்கு சுற்றி திரிந்த மாடு திடீரென அவரை முட்டியதில் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். முதியவரை மாடு முட்டும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைராக பரவியது. இதையடுத்து சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க தாம்பரம் மாநகர காவல் ஆணையர் பெரும்பாக்கம் காவல்நிலைய போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், போலீசார், பெரும்பாக்கம் ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து நேற்று முன்தினம் இரவு பெரும்பாக்கம் சாலைகளில் சுற்றித் திரிந்த 30 மாடுகளை பிடித்து பெரும்பாக்கம், மேட்டு தெருவில் உள்ள சமூதாய நலகூட வளாகத்தில் அடைத்து வைத்தனர். பின்னர், மாட்டு உரிமையாளர்களிடம் தலா ரூ.2000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
மாடு முட்டி முதியவர் பலி சாலையில் சுற்றித்திரிந்த 30 மாடுகள் பிடிபட்டன: உரிமையாளர்களுக்கு அபராதம்
0