புதுக்கோட்டை: இறைச்சிக்கு மாடுகளை ஏற்றிச் சென்ற லாரியை மடக்கிய பஜ்ரங்தள் அமைப்பின் கோட்ட பொறுப்பாளர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்துக்கு இறைச்சிக்காக மாடுகளை ஏற்றிச் சென்ற டாரஸ் லாரியை வழிமறித்து தகராறு செய்துள்ளனர். வியாபாரிகளை மிரட்டி மாடுகளை பிடித்து வைத்ததால் இந்து அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். பஜ்ரங்தள் அமைப்பு நிர்வாகி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து காவல்நிலையம் முற்றுகையிடப்பட்டது.