Monday, February 26, 2024
Home » குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் தவறினால் நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் தவறினால் நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

by Neethimaan

சென்னை: வழக்குகளில் குறித்த காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தவறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை அடுத்த மாதவரம் பால் பண்ணையில் பணியாற்றி வந்த அருளப்பன் என்பவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பண்ணைக்கு வந்த லாரி மோதி விபத்துக்குள்ளாகி மரணம் அடைந்தார். இதையடுத்து, 27 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி அவரது மனைவி, சென்னை மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

காப்பீட்டு நிறுவனத்தின் விளக்கத்தை ஏற்று ஏற்றுக் கொண்ட தீர்ப்பாயம், அருளப்பன் மனைவி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அருளப்பனின் மனைவி வசந்தி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். மோட்டார் வாகன தீர்ப்பாயம் மனுவை நிராகரித்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வசந்தி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன் மற்றும் செந்தில்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது; மற்ற குற்ற வழக்குகளைப் போல் விபத்து வழக்குகளில் புலன் விசாரணை அதிகாரிகள் தீவிரம் காட்டுவதில்லை.

வழக்குகளில் குறித்த காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தவறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் உயர்நீதிமன்றம் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மனுதாரர்கள் குறிப்பிட்ட லாரி, விபத்தில் ஈடுபட்டதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

You may also like

Leave a Comment

four + 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi