மதுரை :மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள நுழைவாயில் அகற்ற ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகில் உள்ள நுழைவாயிலையும் அகற்றி அப்புறப்படுத்தவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மிகவும் பழமை வாய்ந்த நக்கீரர் நுழைவாயிலை அகற்ற உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின் போது, சாலை விரிவாக்கத்தின்போது அலங்கார நுழைவாயில்களையும் அப்புறப்படுத்தினால்தானே போக்குவரத்து சீராகும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
அலங்கார நுழைவாயில்களை அப்புறப்படுத்தினால்தானே போக்குவரத்து சீராகும் ? : ஐகோர்ட்
118
previous post