டெல்லி : நாடு முழுவதும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நேர்காணல் மூலம் தேர்வு செய்யும் புதிய நடைமுறை தொடங்கி உள்ளது. உயர்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை பரிந்துரை செய்ய 5 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற கொலிஜியம், நீதிபதிகளின் பணி விபரங்கள் அடங்கிய குறிப்புகளை மட்டுமே பார்த்து தேர்வு செய்து வந்தது. தற்போது டெல்லி நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பண பைகள் சிக்கிய விவகாரம் பெரும் சர்ச்சை ஆனதை தொடர்ந்து நீதிபதி தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, நீதிபதிகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட 3 மூத்த நீதிபதிகள் நேர்காணல் நடத்தி பரிந்துரைக்கு தேர்வு செய்யும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. தற்போது மத்தியப்பிரதேசம், அலகாபாத், பாட்னா உயர் நீதிமன்றங்களுக்கு காலியாக உள்ள இடங்களை நிரப்ப நீதிபதிகளை பரிந்துரைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. அதற்கான நேர்காணல் கடந்த 2 நாட்களாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது 25 உயர்நீதிமன்றங்களில் 371 நீதிபதிகள் காலியிடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நேர்காணல் மூலம் தேர்வு செய்யும் புதிய நடைமுறை அமல்!!
0