சென்னை: வார இறுதி நாட்களில் கொடைக்கானல், ஊட்டி போன்ற மலைவாச தலங்களுக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை முறைப்படுத்தவும் கட்டுப்பாடுகளை அமல்படுத்துமாறும் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறுவது தொடர்பான வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் நவ.15-ம் தேதி முதல் திருவாரூர், நாகை மாவட்டங்களில் அமல்படுத்தப்படும். டிச.1 முதல் குமரி, தேனி, தருமபுரியிலும் அமல்படுத்தப்பட உள்ளது என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜே.ரவீந்திரன்குமாரி தெரிவித்துள்ளார்.