திருச்சி தொட்டியம் சீனிவாசநல்லூர் காவிரி ஆற்றில் 2001-2004 வரை மணல் குவாரி நடத்த அரசு அனுமதி அளித்தது. சில மாதங்களில் மணல் குவாரியின் செயல்பாட்டை அரசே ஏற்றுக்கொண்டது. குவாரி உரிமம் பெற்றவர்கள், அரசாணையை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். மனு தாரர்களுக்கு சாதகமான சில நிவாரணத்தை நீதிமன்றம் வழங்கிய நிலையில் அரசு உத்தரவையும் உறுதி செய்தது. உயர்நீதிமன்ர உத்தரவை நிறைவேற்றாததை எதிர்த்து மனுதாரர்கள் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். 15 ஆண்டாக நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாததால் தமிழக தொழில்துறை முதன்மை செயலாளருக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. 15 ஆண்டு காலத்தில் பல மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பில் இருந்து மாறிவிட்டனர். தற்போது பொறுப்பில் இருக்கும் ஆட்சியை மட்டும் குறை செல்வதில் எந்த பயனும் இல்லை என நீதிபதி தெரிவித்தார்.
15 ஆண்டாக நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாததால் தமிழக தொழில்துறை முதன்மை செயலாளருக்கு ரூ.20 லட்சம் அபராதம்
0