மதுரை: நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளில் ஒருவரையாவது பணி நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. பணிநீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பினால்தான் மற்ற அதிகாரிகளுக்கு பாடமாக அமையும் என்று நீதிபதி பட்டு தேவானந்த் தெரிவித்துள்ளார். உத்தரவை நிறைவேற்றுவது தொடர்பான ஆவணங்களை தொலைத்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் ஆணையிட்டுள்ளார். நெல்லையைச் சேர்ந்த சிவஞானம் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.