சென்னை : முதுகுளத்தூர் திமுக எம்.எல்.ஏ. முருகேசன் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக திமுக எம்.எல்.ஏ. முருகேசன் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் முருகேசன் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
+
Advertisement


