ஆண்டிபட்டி: மாஜி ஊராட்சி தலைவர், தலைவி தம்பதி ஒரே நாளில் அடுத்தடுத்து இறந்த நிகழ்வு கிராமத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே பாலக்கோம்பை கிராமத்தை சேர்ந்தவர் பெத்தையன் (74). சிங்கராஜபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர். நேற்று முன்தினம் மாலை இறந்துவிட்டார். இவரது மனைவி கருப்பாயம்மாள் பாலக்கோம்பை ஊராட்சி முன்னாள் தலைவியாக இருந்தார்.
நேற்று முன்தினம் கீழே விழுந்ததில் காலில் அடிபட்டதால் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரிடம் கணவர் இறந்துவிட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கருப்பாயம்மாளும் சில மணி நேரத்தில் இறந்தார். ஒரே நாளில் அடுத்தத்து இறந்த தம்பதியின் உடல்கள் பாலக்கோம்பை சுடுகாட்டில் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டது.