மதுரை: தூய்மை பணியாளரை காதல் திருமணம் செய்ததற்காக கோயிலுக்குள் அனுமதிக்காததை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. திருச்சி மாவட்டம் தொட்டியத்தை சேர்ந்த வனிதா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். தொட்டியத்தில் உள்ள ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலில் தன்னையும், கணவரையும் கோயில் கமிட்டி அனுமதிக்கவில்லை என மனுதாக்கல் செய்தார். கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் மனுதாரர் அனுமதிக்கப்பட்டதை கோட்டாட்சியர் உறுதி செய்ய நீதிபதி ஆணையிட்டுள்ளார்.