டெல்லி : “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்திற்கு எதிராக நாடாளுமன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வர I.N.D.I.A. கூட்டணி முடிவு எடுத்துள்ளது. மக்களவைக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை அமல்படுத்துவதற்கு களத்தில் இறங்கி ஒன்றிய அரசு குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆய்வுக் குழு ஒன்றை அமைத்துள்ளது. இதற்கான சட்ட மசோதா செப்டம்பர் 18ம் தேதி தொடங்க உள்ள சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது அனைத்து அதிகாரங்களையும் மத்தியில் குவிப்பதற்கான முயற்சி என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.அத்துடன் ஒன்றிய அரசின் இந்த முயற்சியை தடுக்க நாளை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் வீட்டில் I.N.D.I.A. கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு எதிராக நாடாளுமன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வர I.N.D.I.A. கூட்டணி முடிவு எடுத்து இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.