புதுடெல்லி: காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிடுகையில், கடந்த 2016ம் ஆண்டு கறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை ஒழிப்பதற்காக ஒன்றிய அரசு ரூ.500, ரூ.100 போன்ற நோட்டுகளை ஒழித்தது. 8 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.500 கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. 2020-21ம் ஆண்டில் ரூ.2000 கள்ள நோட்டுகள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகள் தடுக்கப்படவில்லை என்றால், பணமதிப்பிழப்பு மூலம் அரசு என்ன சாதித்தது? என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.