நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது பந்தலூர். இங்குள்ள சேரம்பாடி சப்பந்தோட்டை சேர்ந்தவர் லோகேஷ் (42). தொழிலாளி இவரது மனைவி நித்தியா (35). இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் பிரவீன் (47). இவர் மனைவி, குழந்தைகளை பிரித்து வசித்து வருகிறார்.
இந்நிலையில் நித்தியாவுக்கும், பிரவீனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதை அறிந்த லோகேஷ் மனைவியைக் கண்டித்தார். இதையடுத்து அவர்களிடையே தகராறு ஏற்பட்டு விவகாரம் காவல்நிலையம் வரை சென்றது. அங்கு நித்தியா தனது கணவரை விவாகரத்து செய்வதாக கூறிவிட்டு, பிரவீனுடன் சென்று குடும்பம் நடத்தினார்.
இந்நிலையில், பிரவீனும் நித்தியாவும் வீட்டின் வெளியே சிரித்துசிரித்து பேசிக்கொண்டிருந்தனர். இது, லோகேசுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவி மற்றும் கள்ளக்காதலனை அவர் சரமாரியாக வெட்டினார். இதில் அவர்கள் அலறி சத்தம்போட்டனர். சத்தம் கேட்டு பிரவீனின் தந்தை சந்திரன் (70) தடுக்க முயன்றார். அவருக்கும் வெட்டு விழுந்தது.
இதில் 3 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், பிரவீன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.