அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த மங்கம்மாபேட்டை பகுதியில் டிஎஸ்பி ஜாபர் சித்திக் மேற்பார்வையில் டவுன் இன்ஸ்பெக்டர் தங்ககுருநாதன் மற்றும் போலீசார் நேற்று தீவிர வாகன தணிக்கை மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த அரக்கோணம் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த கவுன்சிலரும், பைனான்சியருமான பாபு (37) என்பவரின், பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், கள்ளத்துப்பாக்கி ஒன்று இருந்தது.
இதுதொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில், உரிய அனுமதியின்றி மேலும் ஒரு ஏர்கன் (துப்பாக்கி) மற்றும் 4 தோட்டாக்கள் வைத்திருப்பது தெரியவந்தது. இவருக்கு ராஜஸ்தானை சேர்ந்த தினேஷ் (34) என்பவர், கள்ளத்துப்பாக்கி வாங்கிக் கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து கவுன்சிலர் பாபு, அரக்கோணத்தில் தங்கி இருந்த தினேஷ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் 2 துப்பாக்கிகள், 4 தோட்டாக்கள் மற்றும் ஒரு பைக்கை போலீசார் பறிமுதல் செய்த செய்தனர்.