புதுடெல்லி: பொதுத்துறை அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் லோக்பால் அமைப்பு விடுத்துள்ள சுற்றறிக்கையில், ‘லோக்பால் அலுவலகத்தில் நேரடியாகவோ, அலுவலக வரவேற்பு மற்றும் பதிவேடு பிரிவிலோ, தபால் மூலமாகவோ அல்லது ஆன்லைன் (இணைய முகவரி: https://lokpalonline.gov.in/lokpalonline) மூலமாகவோ ஊழல் புகார்களை தரலாம். இந்த பரிந்துரைக்கப்பட்ட முறையைத் தவிர வேறு வகையில் தரப்படும் புகார்கள் ஏற்கப்படாது. மேலும், லோக்பால் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரும் புகார்தாரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா சட்டத்தில், லோக்பால் அமைப்பு வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யும் அதிகாரம் வழங்கப்படவில்லை’ என கூறப்பட்டுள்ளது.
ஊழல் புகார்கள்: லோக்பால் சுற்றறிக்கை
0