திருவள்ளூர்: திருத்தணியில் பேருந்தில் ஆபத்தான முறையில் பயணித்த மாணவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆபத்தான முறையில் பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர்களை பிடித்து போலீசார் எச்சரித்தனர். இனிமேல் இதுபோன்று நடக்காத வகையில் காலை, மாலை நேரங்களில் போலீசார் ரோந்து செல்வர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.