திண்டுக்கல்: ஊராட்சிகளை மாநகராட்சிகளுடன் இணைக்கும் பணி விரைவில் தொடங்கும் என ஆத்தூரில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் ஆணை வழங்கும் நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். ஒன்றியங்களை பிரிக்கும் பணி முடிவடைந்ததும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வீடுகள் கட்ட ரூ.3,500 கோடியை முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார். ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு லட்சம் என 8 ஆண்டுகளில் 8 லட்சம் வீடுகள் கட்டித்தர திட்டமிடப்பட்டுள்ளது. எனவும் கூறினார்.
“விரைவில் மாநகராட்சிகளுடன் ஊராட்சிகள் இணைப்பு”
previous post