டெல்லி: டெல்லி மாநகராட்சிக்கு 10 உறுப்பினர்களை ஆளுநர் நியமிக்க தடையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 10 உறுப்பினர்களை நியமிக்கும் டெல்லி ஆளுநரின் முடிவுக்கு மாநில அரசின் ஆலோசனையை பெற தேவையில்லை. டெல்லி மாநகராட்சிக்கு உறுப்பினர்களை நியமிக்க துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது எனவும் கூறியுள்ளது.