சென்னை: சென்னை மாநகராட்சியில் பொது சுகாதாரத் துறையின் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சுமார் 9,000 நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் உள்ளனர் அவர்கள் ஒவ்வொருவருக்கும் நான்கு செட் சீருடைகள் வழங்கப்படும். ரூ.950 மதிப்புள்ள ஒவ்வொரு சீருடையும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படுகின்றன. சென்னை மாநகராட்சியில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர் மற்றும் அம்பத்தூர் மண்டலங்களின் சில பகுதிகளில் தற்போது தூய்மை பணியாளர்களுக்கு புதிய சீருடைகள் வழங்கப்பட்டுள்ளதாக ஆணையர் குமரகுருபரன் தெரிவித்தார். இதற்கு முன் வழங்கப்பட்ட சீருடைகளுடன் ஒப்பிடும்போது இதில் துணி காற்றோட்டமாக இருப்பதாகவும், மேம்பட்ட பிரதிபலிப்பு பட்டைகளையும் கொண்டுள்ளது. இது இரவில் சாலைகளை சுத்தம் செய்யும் போது வாகன ஓட்டிகளுக்கு பணியாளர்கள் தெரியவதை மேம்படுத்தும் என்றும் இந்த பெட்டியில் ரெயின்கோட் மற்றும் முகமூடிகளும் இருக்கும் என மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.
மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புதிய சீருடைகள்
0