சென்னை: தற்போது பரவி வரும் கொரோனாவால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில்; கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கிய உடனே புனே ஆய்வகத்துக்கு 19 வைரஸ் மாதிரிகளை அனுப்பினோம். 19 மாதிரிகளை ஆய்வு செய்ததில் தற்போது பரவும் கொரோனா வீரியம் இல்லாதது என தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கட்டமைப்புகள் சிறப்பாக உள்ளது. கொரோனா குறித்து பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம். தற்போது பரவும் கொரோனா வீரியம் இல்லாதது, மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.