புதுடெல்லி: நாட்டில் கொரோனா பாதிப்பு 6,000 ஐ கடந்துள்ளது. ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் கடந்த 2019 ம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியது. இந்த தொற்றால் சீனா மட்டுமின்றி உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் கடந்த மே மாதத்தில் சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் அதிகரிக்க தொடங்கியது.
இந்தியாவில் கடந்த 48 மணி நேரத்தில் தொற்று எண்ணிக்கை 6,000 ஐ கடந்துள்ளது.புதிதாக 769 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்றிய சுகாதார துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் தற்போது 6,133 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.