சென்னை : கொரானா தொற்று பாதிப்புக்கு நாட்டு மருந்து பயன்படுத்தலாம் என்று சமூகவலைதளங்களில் பரப்பப்பட்டு வரும் தகவல் போலியானது என்று தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
பரவும் செய்தி
“மும்பை கண்டுபிடித்த நாட்டு மருந்தை அரசு அங்கிகரித்துள்ளது. ஒரு ஸ்பூன் மிளகு பொடியும், இரண்டு ஸ்பூன் தேனும், கால் ஸ்பூன் இஞ்சி சாறும் கலந்து வெறும் வயிற்றில் 5 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் 100% கொரானாவை தடுத்துவிடலாம்” என்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது
உண்மை என்ன?
இது தவறான தகவல்.
கடந்த 2018 ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவலுக்கு முன் சளி மற்றும் இருமலுக்கான கசாயம் செய்வதற்கான சமையல் குறிப்பு ஒரு இணையதளத்தில் புகைப்படங்களுடன் வெளியானது. அதே புகைப்படத்துடன் அந்தச் சமையல் குறிப்பைக் கொரோனா மருந்து என்று பரப்பி வருகிறார்கள். உலக சுகாதார நிறுவனம் (WHO) தேன், இஞ்சி மற்றும் மிளகு கொரோனாவுக்கான மருந்து என்பதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரம் இல்லை என்று அறிவித்துள்ளது.