புதுடெல்லி: நாடு முழுவதும் சமீப நாட்களாக கொரோனா பெருந்தொற்று பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகள் எண்ணிக்கையும் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த 2023ம் ஆண்டு மாதிரிகள் சேகரிக்கும் முறை மற்றும் சேகரிக்கும் மையங்கள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை உத்தரவிடக்கோரி கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் செயல்படுத்தவில்லை எனக்கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி அனீஸ் தயாள் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில்,\\” தற்போதைய சூழலில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு தனது தரப்பின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.