புதுடெல்லி: ஸ்பெயின் அதிபருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை முடியவில்லை என்றும் அவருக்கு பதிலாக துணை அதிபர் செல்வதாகவும் கூறியுள்ளார். டெல்லியில் நாளையும், நாளை மறுநாளும் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறவுள்ளதால், உலக தலைவர்களும், பிரதிநிதிகளும் டெல்லியில் குவிந்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இன்று டெல்லி வந்தடைந்தார். அவருடன் அவரது ஜில் பிடனும் வருவதாக இருந்தது.
ஆனால் ஜில் பிடனுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அவர் ஜி-20 மாநாட்டில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ், தனக்கு கோவிட் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், இந்தியாவில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இயலவில்லை என்றும். அவருக்குப் பதிலாக ஸ்பெயினின் துணை அதிபர் நதியா கால்வினோ சான்டாமரியாவும், வெளியுறவு அமைச்சர் ஜோஸ் மானுவல் அல்பெரெஸ் ஆகியோர் இந்தியாவில் நடக்கும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.