சென்னை: கொரேனா காலத்தில் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பயிற்சி மருத்துவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற உரிமை உண்டு என்று சென்னை உயார்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பயிற்சி மருத்துவர்களுக்கு 15 நாட்களில் கோவிட் பணி சான்று வழங்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் கொரோனாவின்போது பணியாற்றியவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் தந்த அரசாணையை எதிர்த்து தனியார் மருத்துவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பயிற்சி மருத்துவர்கள் 10 நாட்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுக் கோவிட் பணி சான்றிதழ் கோரலாம் என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது.