தேவையான பொருட்கள்
1 ஆழாக்கு அரிசி
2வெங்காயம்
1கைப்பிடி மல்லித்தழை
3 பச்சை மிளகாய்
1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
1 பட்டை
2 லவங்கம்
1ஏலக்காய்
1பிரிஞ்சி இலை
தேவையானஅளவு உப்பு
தேவையானஅளவு எண்ணெய்
6முந்திரி
2ஸ்பூன் நெய்
செய்முறை:
மிக்ஸியில் மல்லித்தழை பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அரைத்து கொள்ளவும்.குக்கரில் எண்ணெய் நெய் சேர்த்து பட்டை லவங்கம் ஏலக்காய் பிரிஞ்சி இலை வெங்காயம் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.வதக்கிய பிறகு மஞ்சள் தூள் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.பிறகு தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.நன்கு கொதித்த பிறகு உப்பு காரம் சரி பார்த்து அரிசியை சேர்த்து 43 விசில் வந்ததும் இறக்கவும்.தாளிக்கும் கரண்டியில் நெய் சேர்த்து முந்திரியை வைத்து சாதத்தில் கொட்டவும். சூடான சுவையான கொத்தமல்லித்தழை சாதம் ரெடி.