சென்னை: கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் வாங்க சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழக அரசின் கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் வங்கிகளில் ‘சிபில் ஸ்கோர்’ அடிப்படையில் பயிர்க்கடன் வழங்க வேண்டும் என்ற சுற்றறிக்கையை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சமீபத்தில் அனுப்பி இருந்தார். இந்த நடவடிக்கை விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளுக்கு ‘சிபில் ஸ்கோர்’ அடிப்படையில் கடன் என்ற அறிவிப்பு கடுமையான நெருக்கடியை உருவாக்கும்.

Advertisement



