சென்னை: சென்னை, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில், கூட்டுறவுத்துறையின் அறிவிப்புகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்றது.
பிின்னர் நிருபர்களிடம் அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது:
பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் வழங்கும் சேவைகளை பொதுமக்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் அறிந்து கொள்ளும் வகையில், கூட்டுறவு சங்கங்களால் வழங்கப்படும் சேவைகள் தொகுக்கப்பட்டு, கூட்டுறவு என்ற பெயரில் புதிய செயலி உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் பல்வேறு தகவல்களை பெற முடிவதுடன், கடன் விண்ணப்பத்தினை இணைய வழியே சமர்ப்பித்திடும் வகையில், இந்த செயலியில் விண்ணப்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என அமைச்சர் தெரிவித்தார்.