SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பயத்தம்பருப்பு கோசு மல்லி

2022-10-07@ 14:04:37

தேவையானவை :

பயத்தம் பருப்பு - 1 கப்,
மஞ்சள் தூள்- 1 சிட்டிகை,
உப்பு - தேவைக்கு.

தாளிக்க:

எண்ணெய் - 1 ஸ்பூன்,
கடுகு - ½ ஸ்பூன்,
பெருங்காயம் - 1 சிட்டிகை,
கறிவேப்பிலை - 4,
தேங்காய்துருவல் - 4 ஸ்பூன்,
பச்சைமிளகாய்- 1.


செய்முறை:

பயத்தம் பருப்பை ஊறவைத்து அரைவேக்காடு அளவுக்கு வேகவைத்துக் கொள்ளவும். பிறகு தண்ணீரை வடிகட்டி தனியாக வைக்கவும். அதாவது பயத்தம் பருப்பு ரொம்ப குழைந்து விடக்கூடாது, கிள்ளு பதத்தில் வேக வைத்தால் போதும். கடாயில் எண்ணெய் சேர்த்து, தாளிக்க கொடுத்தவைகளைத் தாளித்துப் போட்டு, அதில் வேகவைத்துள்ள பயத்தம் பருப்பையும் சேர்த்து, தேங்காய்த் துருவல் கலந்து பரிமாற வேண்டும். தேவைப்பட்டால், கேரட் கூட துருவி சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliand-monkey

    தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்த குரங்கு படையல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது..!

  • light-show-28

    பாரிசில் கண்கவர் ஒளி கண்காட்சி: மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணப் பூச்சிகள்..!!

  • china-corona-26

    தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

  • ragul-priyanka-25

    நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

  • ukrain-dark

    இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்