SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்பெஷல் கெபாப்

2022-08-26@ 17:26:06

தேவை:

கோழித் துண்டுகள் - 1/2 கிலோ
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
தனியாத்தூள் - 1 சிட்டிகை
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாயை ஊறவைத்து அரைத்தது - 2 தேக்கரண்டி
கல் உப்பு - தேவையான அளவு
புளித்த தயிர் - 1 கப்
ஆலிவ் எண்ணெய் - தேவையான அளவு
எலுமிச்சம் பழம் - ஒன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு தேக்கரண்டி


பக்குவம்:

சுத்தம் செய்த கோழிக்கறித்துண்டுகளுடன் மஞ்சள்தூள், மிளகாய் பேஸ்ட், கரம் மசாலாத்தூள் சேர்த்து, இஞ்சி பூண்டு கலவையுடன் தயிரை ஊற்றி கிளறி மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். தனியாக விறகடுப்பை எரிய விடவும். கோழித் துண்டுளின் மீது லேசாக அதேநேரம் பரவலாக எண்ணெய் பூசவும். எடுத்த துண்டுகளை ஒவ்வொன்றாக நீண்ட கம்பியில் குத்தி விறகடுப்புத் தீயின் சூட்டில், சுழற்சி முறையில் வாட்டி எடுக்கவும். பரிமாறுவதற்கு முன் எலுமிச்சம் பழத்தை பிழியவும். மென்மையான இறைச்சித் துண்டுகளும், ஊற வைத்து அரைத்த மிளகாய் பேஸ்ட் மற்றும் கல் உப்பு ஆகியவைதான் Kebabஇன் சுவைக்கு காரணம் என்பதை மறக்க வேண்டாம்.  கம்பிகளின் இடையில்  வெள்ளரி, தக்காளி, வெங்காயம், குடைமிளகாய் போன்றவற்றை வட்டமாக வெட்டிவைத்தால் சுவை கூடும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்