வெந்தயக்களி
2022-08-20@ 14:39:19

தேவையான பொருட்கள் :
வெந்தயம் - 500 கிராம்
பச்சரிசி மாவு - 200 கிராம்
வெல்லம் அல்லது கருப்பட்டி - 100 கிராம்
சுக்குதூள் - அரை தேக்கரண்டி
ஏலக்காய் - 2 (தூளாக்கவும்)
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை :
ஏலக்காய், வெல்லம் அல்லது கருப்பட்டியை தூளாக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர், வெந்தயத்தை வெறும் கடாயில் சிவக்க வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு தூளாக்கவும். அரிசி மாவில், வெந்தய மாவு, தண்ணீரை கலந்து தோசை மாவு பதத்திற்கு தயார் செய்யவும். பாத்திரத்தில் வெல்லத்தைக் கொட்டி நீர் கலந்து, பாகு காய்ச்சி வடிகட்டி எடுக்கவும். கரைத்து வைத்துள்ள மாவை அடுப்பில் வைத்து நன்கு கிளற வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, கை விடாமல் கிளற வேண்டும். வெந்து வரும் போது வடிகட்டி வைத்துள்ள வெல்ல பாகை கலந்து கிளற வேண்டும். மாவு பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வர வேண்டும். தண்ணீரில் விரலை விட்டு விட்டு மாவை தொட்டால் அது விரலில் ஒட்டக் கூடாது. அதுவே சரியான பதம். இறுதியாக அதில் நல்லெண்ணெய் ஊற்றி கிளறி சுக்கு தூள், ஏலக்காய் தூள் கலந்திடுங்கள். மிதமான சூட்டில் சாப்பிடவும்.
Tags:
வெந்தயக்களிமேலும் செய்திகள்
மல்டி மில்லட் தோசை
முடக்கத்தான் தோசை
பாசிப்பருப்பு சூப்
தினை பனீர் கட்லெட்
சாமைமாம்பழக் கேசரி
முள்ளங்கி சோள சப்பாத்தி
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!