வெந்தய கீரை கோழி குழம்பு
2022-08-11@ 12:01:04

தேவையானவை :
கோழி கறி – 1/2 கிலோ (கடிக்கும் அளவில் வெட்டப்பட வேண்டும்)
வெந்தய கீரை – 1 கட்டு (2 கப் அளவு)
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
தயிர் – 2 மேசைக்கரண்டி (சிலுப்பியது)
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
தக்காளி (கூழ்) – 2
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
சோம்பு – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி
தனியா தூள் – 2 தேக்கரண்டி
சீரக தூள் – 1/2 தேக்கரண்டி
சோம்பு தூள் – 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
செய்முறை :
கனமான அடிப்பாகம் உள்ள வாணலில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின், சீரகம், சோம்பு தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும், பச்சை வாசம் போகும் வரை வதக்கி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். கோழி கறி, சிலுப்பிய தயிர், உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். எல்லா தூள்களையும் சேர்க்கவும் (தனியா, சீரகம், மிளகாய், மஞ்சள் and சோம்பு தூள்கள்). தக்காளி கூழ் மற்றும் தேவையான தண்ணீர் சேர்க்கவும். வறுவல் போல் வேண்டுமானால் தண்ணீர் குறைவாக சேர்க்கவும். பாத்திரத்தை மூடி 15 நிமிடங்கள் எண்ணெய் பிரியும் வரை வேகவிடவும். இறுதியாக வெந்தய கீரை, கரம் மசாலா சேர்த்து கிளறவும். ஒரு நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். சுவையான மேத்தி சிக்கன் தயார்.
Tags:
வெந்தய கீரை கோழி குழம்புமேலும் செய்திகள்
கருவாடு தொக்கு
பருப்பு உருண்டை பிரியாணி
கேரளா மீன் பொழிச்சல்
புதினா சிக்கன் மசாலா
சிக்கன் லிவர் மசாலா ஃப்ரை
சுவையான மட்டன் சாப்ஸ்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!