SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

உளுந்தங்களி

2022-07-07@ 15:33:56

தேவை:

வறுத்து அரைத்த கறுப்பு உளுந்து மாவு - 100 கிராம்,
பச்சரிசி மாவு - ஒரு சிட்டிகை,
கருப்பட்டி - 100 கிராம்,
நெய் அல்லது நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்,
சுக்கு,
ஏலக்காய் - சிறிதளவு,
தேங்காய்த் துருவல் - ஒரு கப்


பக்குவம்:

உளுந்து மாவு, அரிசி மாவு இரண்டையும் சேர்த்து, இரண்டு கப் தண்ணீரில் கரைக்கவும். கருப்பட்டியைக் கரைத்து, வடிகட்டி, அடி  கனமான கடாயில் கரைத்து வைத்துள்ள அரிசி, உளுந்து கலவையை சேர்த்துக் கிளறவும். பாதி வெந்ததும் கருப்பட்டிக் கரைசலை  வடிகட்டிச் சேர்க்கவும். நன்றாகச் சேர்ந்து வரும்போது நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து, கிளறி இறக்கவும். குறைவான அனலில்  நீண்ட நேரம் கிண்ட வேண்டும். இறுதியாக சுக்கு, ஏலக்காய் பொடி, தேங்காய்த்துருவல் தூவி இறக்கவும்.

பலன்கள்:
உளுந்தில் உள்ள கால்சியம் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் பெண்களுக்கு எலும்புகளை வலுவாக்குகிறது. இதில் உள்ள ஒலியிக் அமிலம் கர்ப்பப்பையை வலுவாக்குகிறது. உடலில் தேவையற்ற நச்சை நீக்குகிறது.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்