வரகு புளியோதரை சோறு
2022-06-29@ 17:54:14

தேவை:
வரகரிசி - ஒரு கப் முழு மல்லி (தனியா),
எள் - தலா ஒரு டீ ஸ்பூன்,
வெந்தயம் - கால் சிட்டிகை,
காய்ந்த மிளகாய் - 10,
புளி - எலுமிச்சை அளவு,
வேர்க்கடலை - 5 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு,
உளுத்தம்பருப்பு,
கடுகு,
கறிவேப்பிலை,
பெருங்காயத்தூள் - தாளிக்கத் தேவையான அளவு,
பொடித்த கருப்பட்டி வெல்லம் - சிறிதளவு,
மஞ்சள்தூள்,
மிளகு - ஒரு சிட்டிகை,
எண்ணெய் - கால் கப்,
உப்பு - தேவைக்கேற்ப.
பக்குவம்:
வரகரிசியை 10 நிமிடங்கள் ஊறவைத்து, களைந்து, இரண்டு கப் தண்ணீர் விட்டு வேகவிடவும். புளியை ஊற வைக்கவும். வெறும் வாணலியில் மல்லி (தனியா), எள், வெந்தயம், காய்ந்த மிளகாய், மிளகு ஆகியவற்றைத் தனித்தனியே வறுத்து ஆறவைத்து, மிக்ஸியில் அரைத்து பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயத்தூள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை தாளித்து; புளியைக் கரைத்து ஊற்றி மஞ்சள்தூள், உப்பு, வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு, அரைத்து வைத்திருக்கும் பொடியைச் சேர்த்துக் கிளறி, இறுக வற்றி எண்ணெய் நன்கு பிரிந்துவரும்போது இறக்கினால் புளிக்காய்ச்சல் தயார். தேவையான அளவு புளிக்காய்ச்சலை வரகரிசி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.
பலன்கள்: வரகில் இரும்புச்சத்தும் கார்போஹைட்ரேட்டும் நிறைந்திருக்கின்றன. மேலும் இதில் உள்ள நுண்ணூட்டச்சத்துக்கள் உடலை வலுவாக்குவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி, ரத்த அணுக்களை செழிக்கச் செய்கின்றன.
Tags:
வரகு புளியோதரை சோறுமேலும் செய்திகள்
மல்டி மில்லட் தோசை
முடக்கத்தான் தோசை
பாசிப்பருப்பு சூப்
தினை பனீர் கட்லெட்
சாமைமாம்பழக் கேசரி
முள்ளங்கி சோள சப்பாத்தி
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!