சீமைச்சக்கை தொவரன்
2022-06-24@ 17:12:17

தேவை:
சீமைச்சக்கை (இதை கறிப்பலா, சீனிப்பலாக்காய் என்று கூறுவார்கள்) - ஒன்று,
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுந்து - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 10 இலைகள்,
தேங்காய் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
அரைக்க:
தேங்காய்த் துருவல் - அரை கப்,
காய்ந்த மிளகாய் - ஒன்று,
சின்ன வெங்காயம் - 2 (தோலுரிக்கவும்),
பூண்டு - 3 பல்,
சீரகம் - கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 3 இலைகள்.
செய்முறை:
சீமைச்சக்கையின் தோலைச் சீவி, பாதியாக நறுக்கிக்கொள்ளவும். பின்னர் நடுவில் இருக்கும் வழவழப்பான பகுதிகளை எடுத்து, பிறகு கன சதுரங்களாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய சீமைச்சக்கை துண்டுகள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். நன்கு வெந்ததும் தண்ணீரை வடிகட்டிக்கொள்ளவும். வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, உளுந்து சேர்த்து தாளிக்கவும். பின்னர் கறிவேப்பிலை, வேகவைத்த சீமைச்சக்கை துண்டுகளைச் சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு கலந்து புரட்டி பச்சை வாசனை போகும் வரை வதக்கி இறக்கவும்.
Tags:
சீமைச்சக்கை தொவரன்மேலும் செய்திகள்
வாழைக்காய் மிளகு வறுவல்
பலாக்கொட்டை காரப் பொரியல்
கொத்தவரைப் பொரியல்
பூசணி அவியல்
பீர்க்கங்காய் முட்டை பொரியல்
குடைமிளகாய் பொரியல்
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!