சத்துமாவு வாழைப்பழ மஃபின்ஸ்
2022-06-24@ 17:11:14

தேவை:
சத்துமாவு மிக்ஸ் - ½ கப்
கோதுமை மாவு - ½ கப்
நன்றாக பழுத்த வாழைப்பழம் - 2
சர்க்கரை - ½ கப்
சமையல் எண்ணெய் - ¼ கப்
பாதாம் பருப்பு (பொடியாக நறுக்கியது) - ¼ கப்
லவங்கப்பட்டை தூள் - 1 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - ¼ டீஸ்பூன்
வென்னிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
மைக்ரோவேவ் அவனை 180 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் 10 நிமிடங்களுக்கு பிரீ ஹீட் செய்து, மஃபின் ட்ரேயை தயார்படுத்தி வைக்கவும். சத்துமாவு மிக்ஸ், கோதுமை மாவு, லவங்கப்பட்டை தூள், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து இரண்டு முறை சலித்து எடுத்துக்கொள்ளவும். ஒரு பெரிய கிண்ணத்தில் வாழைப்பழங்களைப் போட்டு நன்றாக மசித்துக்கொள்ளவும். அதில் ½ கப் சர்க்கரை சேர்த்து முழுவதும் கரையும் வரை கலக்கவும். பிறகு இந்தக் கலவையில் எண்ணெயை ஊற்றி கலக்கவும்.
பிறகு எடுத்துவைத்திருக்கும் மற்றப் பொருட்களையும், ஒன்றன் பின் ஒன்றாக வாழைப்பழக் கலவையில் கொட்டி நன்றாகக் கலக்கவும். தயார் செய்துள்ள மாவை மஃபின் லைனர்களில் முக்கால் அளவுக்கு நிரப்பவும். காற்றுக்குமிழிகள் உண்டாவதைத் தடுக்க டிரேவை இரண்டு அல்லது மூன்று முறை மெதுவாக தட்டவும். மஃபின்களை 180 டிகிரி செல்சியஸில் ப்ரீஹீட் செய்யப்பட்ட அவனில், 25 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும். பேக் செய்து முடித்ததும் மஃபின்களை கவனமாக குளிர்விக்கவும். சுவையான, மென்மையான ‘சத்துமாவு வாழைப்பழ மஃபின்ஸ்’ தயார்.
மேலும் செய்திகள்
கம்பு சட்னி
பச்சை பட்டாணி தோசை
சிறுதானிய அடை தோசை
பீட்ரூட் தினை பணியாரம்
வரகு பெசரட்டு
தேங்காய் கசகசா பால்
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!