SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

பச்சை பயறு தால்

2022-06-20@ 18:07:04

தேவையான பொருட்கள்:

பச்சை பயறு - 1/2 கப்
சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - 2 1/2 கப்

தாளிப்பதற்கு...

எண்ணெய் - 2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பூண்டு - 2 பல்
கறிவேப்பிலை - சிறிது
மிளகு - 1/2 டீஸ்பூன்

மசாலா பொடிகள்...


மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்


செய்முறை:

முதலில் பச்சை பயறை ஒரு கடாயில் போட்டு குறைவான தீயில் குறைந்தது 3-5 நிமிடம் வறுத்து இறக்கி, குளிர வைத்து, நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பூண்டு சேர்த்து சில நொடிகள் வதக்க வேண்டும். பின்பு அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.பிறகு அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

அதன் பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் ஆகியவற்றை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, கழுவி வைத்துள்ள பச்சை பயறை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, நீரை ஊற்றி குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து 6 விசில் விட்டு இறக்கிக் கொள்ளுங்கள். விசில் போனதும் குக்கரை திறந்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, மத்து கொண்டு நன்கு மசித்து விட வேண்டும். பின் கடைந்த பச்சை பயறை மீண்டும் அடுப்பில் வைத்து ஒரு கொதி விட்டு இறக்கி, கொத்தமல்லியை மேலே தூவினால், பச்சை பயறு தால் தயார்.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்