மணத்தக்காளி கீரை கூட்டு
2022-06-02@ 17:19:46

தேவையான பொருட்கள்:
மணத்தக்காளி கீரை - ஒரு கட்டு.
சின்ன வெங்காயம் - இரண்டு.
தக்காளி - ஒன்று.
பூண்டு - 4 பல்.
பச்சை மிளகாய் - 2.
மஞ்சள் தூள் - அரை சிட்டிகை.
சீரகத்தூள் - அரை சிட்டிகை.
மிளகுத்தூள் - கால் சிட்டிகை.
பாசிப்பருப்பு - ஒரு கையளவு.
உப்பு - தேவைக்கு.
தாளிக்க எண்ணெய் - சிறிதளவு.
சீரகம் - அரை சிட்டிகை.
உளுத்தம் பருப்பு - ஒரு சிட்டிகை.
மிளகாய் வற்றல் - 2.
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி.
பக்குவம்:
நறுக்கிய கீரை, பாதி வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள், சீரகம் / மிளகுத் தூள்கள் இவற்றுடன் ஊறிய பாசிப்பருப்பை தண்ணீருடன் சேர்த்து மண் சட்டியில் வேக வைக்க வேண்டும். கீரைக்கு மண்சட்டிதான் பிரதானம். வெந்திருக்கும் கீரையை மத்து அல்லது அகப்பை கொண்டு கடைந்து மசித்து வைக்கவும். ஒரு கடாயில் குறைவாக எண்ணெய் விட்டு சீரகம், உளுத்தம் பருப்பு, வற்றல் சேர்த்து தாளிக்கவும். பின்னர் நறுக்கிய பாதி வெங்காயம் போட்டு வதக்கவும். கடைந்த கீரையில் சிறிது உப்பையும், தேங்காய் துருவலையும் சேர்த்து பிரட்டவும். பிறகு தாளித்ததை சேர்த்து கீரையை கலந்துவிடவும்.
Tags:
மணத்தக்காளி கீரை கூட்டுமேலும் செய்திகள்
மல்டி மில்லட் தோசை
முடக்கத்தான் தோசை
பாசிப்பருப்பு சூப்
தினை பனீர் கட்லெட்
சாமைமாம்பழக் கேசரி
முள்ளங்கி சோள சப்பாத்தி
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!