SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மக்கன் பேடா

2021-09-28@ 17:39:57

தேவையான பொருட்கள்

1/2 கப் கோவா
2 டேபிள் ஸ்பூன் மைதா
1/4 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
2 டேபிள் ஸ்பூன் மில்க் பவுடர்
1 டேபிள் ஸ்பூன் பவுடர் சுகர்
1 கப் சர்க்கரை
1 டேபிள் ஸ்பூன் பிஸ்தா, பாதாம்
1 டீஸ்பூன் பிஸ்தா பவுடர்
ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள்
குங்குமப்பூ


செய்முறை:

ஒரு அகலமான தட்டில் கோவா, மைதா,பேக்கிங் பவுடர்,மில்க் பவுடர்,பவுடர் சுகர் எல்லாம் சேர்த்து நன்கு பிசையவும். பிசைந்த மாவை பத்து நிமிடங்கள் அப்படியே மூடி வைக்கவும். கொஞ்சம் மாவை எடுத்து குங்குமப்பூ, நட்ஸ் கலந்து நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். பின்னர் பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். உருண்டைகளின் நடுவில் நட்ஸ் கலவையை வைத்து மூடி பேடா வடிவில் அழுத்தி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தயார் செய்து வைத்துள்ள பேடாக்களை சேர்த்து மிதமான சூட்டில் வைத்து பொரித்தெடுக்கவும்.

பின்னர் வேறு ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர், ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும். கம்பி பதம் ஏதும் தேவை இல்லை. நன்கு சர்க்கரை கரைந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர் பொறித்து எடுத்த பேடாக்களை பாகில் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து எடுத்து நட்ஸ்,பிஸ்தா பொடி தூவி அலங்கரித்தால் சுவையான மக்கன் பேடா சுவைக்கத் தயார்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • ragul-inde-15

    டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!

  • independence-15

    75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!

  • inde-12

    நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்