SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரண்டை குழம்பு

2021-02-03@ 17:46:15

என்னென்ன தேவை?

கொழுந்து பிரண்டை 1 இஞ்ச் நீளத்தில் நறுக்கவும் - 1 கப்,
சின்ன வெங்காயம் - 10,
பூண்டு - 10 பல்,
காய்ந்தமிளகாய் - 1,
குழம்பு மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்,
தனியா தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
புளிக்கரைசல் - 2 கப்,
உப்பு,
எண்ணெய் - தேவைக்கு,
வெல்லம் - சிறிது.


எப்படிச் செய்வது?

கடாயில் சிறிது நல்லெண்ணெய் விட்டு நறுக்கிய பிரண்டையை சேர்த்து 10 நிமிடம் நன்றாக வதக்கவும். பிரண்டை நிறம் மாறி கரண்டியால் அழுத்தினால் சத்தம் வராதபடி ஈரம் போக வதக்கவும். சட்டியில் நல்லெண்ணெயை காயவைத்து கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் தாளித்து வெங்காயம், பூண்டு போட்டு நன்றாக வதக்கி, குழம்பு மிளகாய் பொடி, தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து ஒரு முறை கிளறி புளி கரைசல் ஊற்றி, வதக்கிய பிரண்டை, உப்பு போட்டு எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விட்டு இறக்கும்போது வெல்லம் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்