SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிஸ்கெட் பர்த்டே கேக்

2020-10-15@ 15:06:10

என்னென்ன தேவை?

மேரி பிஸ்கெட் - 40,
சாக்லெட் பிஸ்கெட் - 40,
வெண்ணெய் - 1 கப்,
ஃப்ரெஷ் கிரீம் - 1/4 கப்,
சாக்லெட் பார் - 100 கிராம்,
பவுடர் சுகர் - 2 டீஸ்பூன்.


எப்படிச்  செய்வது?

மேரி பிஸ் கெட்டை மிக்சியில் நன்றாக பொடித்து, அத்துடன் 1/4 கப் உருகிய வெண்ணெய், 2 டீஸ்பூன் கிரீம் சேர்த்து நன்றாக கலந்து கேக் ட்ரேயில் சமமாக பரப்பி ஃப்ரிட்ஜில் 1 மணி நேரம் அல்லது கலவை செட் ஆகும் வரை வைக்கவும். சாக்லெட் பிஸ்கெட்டை நன்றாக பொடித்து, அத்துடன் 1/4 கப் உருகிய வெண்ணெய், 2 டீஸ்பூன் கிரீம் சேர்த்து நன்கு கலந்து ஏற்கனவே செட் செய்த பிஸ்கெட் கலவையின் மேல் சமமாக பரப்பி ஃப்ரிட்ஜில் மீண்டும் 30 நிமிடம் வைக்கவும். சாக்லெட் பாரை டபுள் பாயிலிங் முறையில் உருக்கி, அதனுடன் மீதியிருக்கும் வெண்ணெய், கிரீம், பவுடர் சுகர் சேர்த்து நன்கு பளபளப்பாக வரும் வரை கலந்து கேக்கின் மேல் பரவலாக ஊற்றி மீண்டும் 10 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்