முருங்கைப்பூ கீரை பருப்பு கூட்டு
2019-12-05@ 14:32:39

தேவையான பொருட்கள்
பாசிப்பயர் - 100 கிராம்
முருங்கைக்கீரை - 5 கப்
முருங்கைப்பூ - 50 கிராம்
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
சீரகம் - 1 டீஸ்பூன்
வரக்கொத்துமல்லி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - சிறிதளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை
குக்கரில் போதுமான தண்ணீர் சேர்த்து பாசிப்பயர், முருங்கைக்கீரை, முருங்கைப்பூ, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 2 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், கொத்தமல்லி, சிறு துண்டுகளாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து வேக வைத்த பருப்பு, கீரை கலவையை சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் இறக்கவும். சூடான சாதத்துடன் கூட்டை சேர்த்து
சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
குறிப்பு : முருங்கைப்பூவை நெய்யில் வதக்கி அதனுடன் வெல்லம் (அ) பொடித்த பனங்கற்கண்டைச் சேர்த்து சாப்பிடலாம். முருங்கை இலையில் கால்சியம், புரதச்சத்து, வைட்டமின் சி, ஏ நிறைந்துள்ளது. கூடுமானவரை முருங்கைக்கீரையை உணவில்
அவ்வப்போது சேர்த்துக் கொள்வது நல்லது.
மேலும் செய்திகள்
கம்பு கொழுக்கட்டை
முருங்கை ரசம்
சிவப்பரிசி கொழுக்கட்டை
நவதானிய தோசை
ராஜ்மா சுண்டல்
கிராமத்து தக்காளி ரசம்
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
சிலியில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: புகைமூட்டத்துடன் செந்நிறமாக காட்சியளித்த வானம்...புகைப்படங்கள்
சீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்!: 5 நாளில் கட்டப்பட்ட 1,500 அறை கொண்ட மருத்துவமனை..!!